Close

தன்னிறைவுத் திட்டம்

முன்னுரை

ஊரகப் பகுதி மக்களின் சுய சார்புத் தன்மை மற்றும் அவர்களின் பொது மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு தன்னிறைவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகின்றது. கண்டறியப்பட்ட பணிக்கான மதிப்பீட்டு செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் பொதுமக்கள் பங்களிப்பாக அளிக்க வேண்டும். பொது மக்களின் சுயசார்பு தன்மையை வளர்ப்பதற்கும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி பராமரிப்பதில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்து அதன் மூலம் தன்னிறைவு பெறச் செய்யவும் அரசு தன்னிறைவுத் திட்டத்தினை செயல்படுத்துகிறது.

அரசு நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சமுதாயத்தின் தேவைகள் ‘தன்னிறைவு’ அடைவதற்கு வழிவகை செய்கிறது. தன்னிறைவுத் திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

பொதுமக்கள் பங்களிப்பு

கண்டறியப்படும் பணிக்கான மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் பொது மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பணிகளை தேர்வு செய்தற்கான நடைமுறைகள்

  1. எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணியினைக் குறிப்பிட்டு பொது மக்களின் பங்களிப்பான மூன்றில் ஒரு பங்கு தொகையை வழங்க சம்மதம் தெரிவித்து விணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்
  2. மேற்கொள்ளப்பட வேண்டிய பணியின் சாத்தயக்கூறுகள் மதிப்பீட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோருவார் உரிய தொகைக்கான கேட்பு வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும்.
  3. உள்ளாட்சி அமைப்பு பல்கலைக் கழகங்கள் வழங்கும் பங்களிப்பு நிதி இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  4. இத்திட்டத்திக் கீழ் குறைவாக நிதி இருக்கும் பட்சத்தில் பல்வேறு பணிகளை செய்ய கோரிக்கைகள் வரப்பெறின் அவற்றுள் மிக அதிக அளவில் சமுதாயத்திற்கு பயன்தரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அத்தகைய பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவார்.

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் எடுத்துச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட பணிகள் :

  1. அரசு பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகளுக்கு கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டுதல், மிதி வண்டி நிறுத்துமிடம் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல்.
  2. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மையங்கள், கால்நடை மருந்தகங்கள், நூலகங்களுக்கு கட்டடங்கள் கட்டுதல் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல்.
  3. இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான இடுகாடுகள் உட்பட இடுகாடுகளுக்கு பொது வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல்.
  4. ஊரக மற்றம் நகர்ப்புற பகுதிகளில் சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், பள்ளி சமையல் கூடங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் ஆகியவைகளுக்கு கட்டடங்கள் கட்டுதல்.
  5. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமுதாயக் கட்டங்கள், குடிநீர் வழங்குதல், சிமெண்ட் கான்கீரிட் சாலைகள் மற்றும் கதிரடிக்கும் களங்கள் போன்ற சமுதாய சொத்துக்களை உருவாக்குதல்.
  6. ஆண்கள் மற்றும் மகளிருக்கென ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல்.
  7. பாலங்கள், சிறிய பாலங்கள் கட்டுதல், சாளை / கப்பிச் சாலைகளை தார் சாலைகளை தரம் உயர்த்துதல், பழுதடைந்த தார்சாலைகளை புதுப்பித்தல்.
  8. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலை திட்டு (Traffic Island) நீரூற்று தெருவிளக்குகள் அமைத்தல்.
  9. திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து வகைப் பணிகள் மற்றம் சுற்றுச்சூழலின் துப்புரவு நிலை தொடர்பான மேம்பாட்டு பணிகள்.
  10. அரசு கட்டங்களுக்கு சூரிய ஒளி விளக்குகள் அமைத்தல்.
  11. குடிநீர் வழங்குதலுக்கான எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலை (Reverse Osmosis Plant) அமைத்தல்.

நிபந்தனைகள்

  1. சொத்தின் உரிமைதாரின் முன் அனுமதி பெறாமல் எந்த நிரந்தர கட்டுமான பணியும் செய்யக்கூடாது.
  2. பணிக்கான பங்களிப்பை அளிக்க முன்வரும் நபர்-நிறுவனம் (Contributing person / entity) சொத்திலோ அல்லது அதன் பயன்பாட்டிலோ (Property / Use of
    property) எந்த உரிமையும் கோர முடியாது.

தடை செய்யப்பட்ட பணிகள் :

  1. மத்திய / மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவைகளுக்கான கட்டடங்கள் கட்டுதல்.
  2. விதிவிலக்கு : ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், பொது விநியோகக் கடைகள் கட்டுதல், நேரடி கொள்முதல் நிலையங்கள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடங்கள் மற்றும் மொத்த குளிர்பதன மையங்களுக்குக் கட்டங்கள் கட்டுதல்.
  3. அசையும் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல்.
  4. விதிவிலக்கு : அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் ஆகியவற்றிற்கு தளவாட சாமான்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் திடகழிவு மேலண்மை பணிக்காக மூன்று சக்கர மிதிவண்டி, சிறு லாரிகள் போன்ற வாகனங்கள் வாங்கலாம்.
  5. அனைத்து வணிக நிறுவனங்கள் – அலகுகள் சார்ந்த பணிகள்
  6. தனிநபர் – குடும்ப பயனுக்காக சொத்துக்களை உருவாக்குதல்

நிதி ஒதக்கீடு மற்றும் விடுவித்தல் :

  1. மொத்த ஒதுக்கீடான ரூ 100 கோடியில், 74 விழுக்காடு அதாவது ரூ 74 கோடி அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் மறு ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. மொத்த ஒதுக்கீட்டில் 1 விழுக்காடு அதாவது ரூ 1 கோடி செய்திää கல்வி மற்றும் தகவல் தொடர்ப நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  3. மாவட்ட ஆட்சியர்களால் கோரப்படும் சிறப்பு பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்க மீதமுள்ள தொகை ரூ 25 கோடி (25 சதவிகிதம்) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
  4. மாவட்ட ஆட்சித் தவைரால் பெறப்படும் அனைத்து பங்களிப்புகளும் “மாவட்ட ஆட்சித் தலைவரின் தன்னிறைவுத் திட்டக் கணக்கு” என்ற பெயரில் எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையாக இருக்க வேண்டும்.