Close

தோட்டக்கலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்கள் மா, கொய்யா, வாழை, முந்திரி, மரவள்ளி, கத்தரி, வெண்டை, மிளகாய், மல்லிகை, மற்றும் இதர பயிர்கள் ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில்   பல்வேறு வகையான தோட்டக்கலை சாகுபடி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலை பயிர்களின் பரப்பை அதிகரித்து உற்பத்தியை இருமடங்காகவும் விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்காகவும் அதிகரிப்பதே இத்துறையின் முதன்மை  நோக்கம் ஆகும். மரபு ரீதியான பயிர்வகைகள் பயிரிடுதல், தோட்டக்கலை உயா் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், உழவியல் தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் அறுவடை பின்செய் நோத்தி போன்றவைகளை தோட்டக்கலை துறை ஊக்கப்படுத்துகிறது. தோட்டக்கலை துறையின் தொழில்நுட்ப உத்திகளான தோட்டக்கலை பயிர்களை விரிவுபடுத்துதல், உயா்ரக விதைகள் சாகுபடி, உயா் அடா்த்தி நடவு, உயா் மதிப்பு தோட்டக்கலைப் பயிர்களை பசுமைகுடில் வளா்ப்பதில் ஊக்குவித்தல் மற்றும் நுண்ணீா் பாசனத்தின் பயன்பாடு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தோட்டக்கலை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலப்பின காய்கறி நாற்றுகள் மாநில தோட்டக்கலை பண்ணையில் வளா்க்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிர்சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்க மானிய விலையில் விநியோகிக்ககப்படுகிறது.

நுண்ணீா் பாசனத் திட்டம் :

நுண்ணீா் பாசனம் என்பது ஒரு மேம்பட்ட நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொழில்நுட்பமாகும். இது நீா் பயன்பாட்டு திறனை 40 – 60% சதவீதம் வரை அதிகரிக்கிறது. பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கு நீா்பாசனம் ஒரு முக்கிய காரணியாகும். நுண்ணீா் பாசனத் திட்டம் நீா் பயன்பாட்டில் பொருளாதார ரீதியாகவும் திறனாகவும் செயல்படுகிறது. நீரின் பயன்பாட்டுத் திறனை தவிர, உரங்களின் பயன்பாட்டு செயல்திறன் நேரடியாக வோ்ப்பகுதிகளில் நுண்ணீா்பாசன நீா் மூலம் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்த நுண்ணீா் பாசனத்தின் மூலம் களைகளின் வளா்ச்சி குறைகிறது மற்றும் வேலையாட்களின் தேவை குறைகிறது. நுண்ணீா் பாசனத்தின் மூலம் விவசாயத்தின் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதுடன் விவசாயி௧ளின் வருமானம் மூன்று மடங்காக அதிகரிக்கின்றது. தமிழ்நாட்டில் நுண்ணீா் பாசனத்திற்கு அரசாங்கம் பெரும் உந்துதலை வழங்கியதுடன், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது. இந்த திட்டம் 50 : 50 என்ற விகிதத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், 50 : 25 என்ற விகிதத்தில் மற்ற விவசாயிகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசிற்கு இடையே பகிர்வு மாதிரி செயல்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்:

காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் மலைப்பயிர்கள் போன்ற உயா் மதிப்பு பயிர்கள் மற்றும் உயா் தொழில் நுட்ப உத்திகளை பயன்படுத்தி இத்திட்டத்தின் மூலம் பரப்பு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் :

தேசிய வேளாண் வளா்ச்சி திட்டமானது மத்திய மாநில அரசின் பங்கீட்டுத் திட்டமாகும். மத்திய மாநில அரசின் மூலம் 60 : 40 என்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களை புத்தூட்டம் செய்யும் பொருட்டு பழங்கள், காய்கறிகள், பூக்கள் மற்றும் மலைப்பயிர்கள் போன்ற பயிர்களில் பரப்பு விரிவாக்கத் திட்டம், வெங்காயம் பயிர் உற்பத்தி திட்டம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர்களை வளா்த்தலின் கீழ் பசுமைக்குடில் முதலான உபதிட்டங்களில் தோட்டக்கலை பயிர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு வீட்டுக் காய்கறித் திட்டம் அமைத்தல், முதலான திட்டங்களும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் :

வறட்சி போன்ற இயற்கை பேரழிவினால் ஏற்படும் பயிரிழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஒரு ஆழ்ந்த அக்கறையுடன் அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு உறுதிபடுத்துதல், பயிர் உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுடன் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுகிறது.

பயிரிழப்பு/சேதம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து மீளவும், விவசாயிகளின் வருமானத்தை உறுதிபடுத்துதல் மற்றும் விவசாயத்தில் தங்கள் தொடா்ச்சியை உறுதிபடுத்தவும் விவசாயிகளுக்கு புதுமையான மற்றும் நவீன விவசாய நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்கிறது. மேலும், விவசாயிகளின் பயிரிழப்புக்கான துல்லியமான இழப்பீடு கிடைக்கவும் வழிவகுகிக்கிறது. கடன் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான தேதியில் பதிவு செய்யப்படுவது இத்திட்டத்தின் பிற நன்மைகள் ஆகும். இந்த திட்டமானது  மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மாநில தோட்டக்கலை பண்ணை

மாநில தோட்டக்கலை பண்ணையின் முக்கிய நோக்கமானது குறிப்பிட்ட நேரத்தில் தரமான நாற்றுகள் மற்றும் பழக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதாகும். இந்த மாவட்டத்தில் ஒரு அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகின்றது.

 

 
தோட்டக்கலை துணை இயக்குநா்
மயிலாடுதுறை மற்றும் குத்தாலம்
தோட்டக்கலை துணை இயக்குநா்
சீர்காழி

 

மின்ன அஞ்சல் : ddhmayiladuthurtai[at]gmail[dot]com

கைபேசி : 9159627783

 

மின்ன அஞ்சல் : ahosembanarkoil[at]gmail[dot]com

கைபேசி: 7904515559