Close

பொது சுகாதாரம் (ம) நோய்த் தடுப்பு மருந்து துறை

புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாடு தேசியதிட்டம்
  1. தமிழ்நாட்டின் மக்கள் நலன்களை மேன்படுத்துவதற்காக ஏழை மற்றும் பின்தங்கியவர்களுக்கான உருவாக்கபட்டது தான் இந்த தொற்றாத நோய்கள் பிரிவு.
  2. தொற்றாத நோயால் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் வரும் நோயாளிகளுக்கு தொற்றாத நோய்க்கான பாரிசோதனையும் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
  3. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் தொற்றாத நோய்க்கான தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
  4. 18 வயது மேற்பட்டவர்களுக்கு சாக்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  5. 30 வயது மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்று நோய் கண்டயறியும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  6. மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்று நோய் உறுதி செய்வதற்காகவும் மேற்படி சிகிச்சைக்காகவும் அனுப்பபடுகிறார்கள்.
  7. தொற்றாத நோய்களினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
  8. தொற்றாத நோய்கள் பிரிவுகளில் படிவங்கள். அட்டைகள் மற்றும் பதிவேடுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் பராமரிக்கப்படுகிறது.
  9. தொற்றாத நோய்கள் பிரிவு சம்மந்தமான விவரங்களை இணையதளங்களில் பராமரிக்கவும் பகிரவும் படுகிறது.
தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம்

தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (RBSK) டிசம்பர் 2014ல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வளரிளம் பருவத்தினர் வரை ஏற்படக்கூடிய பிறவிக்குறைபாடுகள், வளர்ச்சிக்குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றிற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆரம்ப நிலையிலேயே வளர்ச்சி குறைபாடுகள் மற்றும் இதர குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படுவதால், அக்குறைபாடுகளை துரித நிலையில் குணப்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு நடமாடும் மருத்துவ குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 12 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை பரிசோதித்து, சிறிய பிரச்சினைகளுக்கு அங்கேயே சிகிச்சை மேற்கொள்கின்றனர். இதர நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. 6-ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவியர்களை பெண் மருத்துவ அலுவலர் குழுவும், மாணவர்களை ஆண் மருத்துவ குழுவும் 25 கருவிகள் உள்ளடக்கிய குழந்தைகள்நல பரிசோதனை பெட்டகத்தைக்கொண்டு பிரத்யேகமாக பரிசோதனை செய்கிறார்கள்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் சத்தான உணவுக்கு ஆகும் செலவை மேற்கொள்ளல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்தல், குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பதை தடுத்தல் போன்ற உயரிய நோக்கங்களுக்காக நிதியுதவி வழங்கிட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 6000 ரூபாய் என்று இருந்ததை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 01.06.2011 முதல் 12000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார் இந்த நிதியுதவி நிபந்தனைகளின் பேரில், மூன்று தவணைகளாக இரண்டு மகப்பேறுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 01.10.2012 முதல் பயளாளிகளுக்கு நோரிடையாக அவர்களது வங்கி கணக்கில் மின்னணு பகிர்மான முறை (ECS) மூலம் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால சேவைகளை பெற்றுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன்பு முதல் தவணையும், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது தவணையும், குழந்தைகளுக்கு அனைத்து தடுப்புசிகளும் பெற்றுக்கொண்ட பின் மூன்றாவது தவணையும் வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்த இலங்கை அகதிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர் ஆவர். இத்தொகை தற்போது நபர் ஒருவருக்கு ரு.18.000 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலையில்லா சானிடாரி நாப்கின் வழங்கும் திட்டம்

வருடத்திற்க்கு 2 மாதத்திற்க்கு ஒரு முறை (12) பாக்கெட் எண்ணிக்கை 10-19 வயதில் உள்ள வளர் இளம் பெண்களுக்கு தரப்படுகிறது.

வராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம்

பிரதி வாரம் வியாழன் தோறும் இரும்பு சத்து மாத்திரை 10-19 வயது (6 முதல் 12 வகுப்பு) மாணவ. மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

தேசிய குடற்புழு நீக்கம்

வருடத்திற்கு இருமுறை ( பிப்ரவரி மற்றும் ஆக்ஸ்ட் மாதங்களில் நடைபெறுகிறது. (1-19 வயது) பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

வைட்டமின் A திரவம் வழங்குதல்

வருடத்திற்க்கு இருமுறை (செப்டம்பர் மற்றும் மார்ச்) மாதங்களில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

பிறப்பு இறப்பு பதிவு முறை

மத்திய பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் 1969ன் படி, அனைத்து பிறப்பு இறப்புகளை பதிவு செய்வது 01.04.1970 முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தின் படி பிறப்பு மற்றும் இறப்புகளை அவை நிகழ்ந்த இடத்திலேயே 21 நாட்களுக்குள் பிறப்பு இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000 ன் படி பிறப்பு இறப்பு பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டங்களில் உள்ள 241 பிறப்பு இறப்பு பதிவு மையங்கள் மூலம் வருவாய் துறை , பேரூராட்சி , நகராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதார துறைகளை சார்ந்த பிறப்பு இறப்பு பதிவாளர்களால் பிறப்பு இறப்பு பதிவு நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் தற்பொழுது பிறப்பு இறப்பு பதிவில் 100 விழுக்காடு அடைந்துள்ளது.

சட்டப்பேரவையில் அறிவித்தபடி சென்னை மாநகராட்சி போன்றே அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழை இணையதளம் மூலமாக, பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது சுகாதாரத் துறையால் உருவாக்கப்பட்ட புதிய பிறப்பு இறப்பு பதிவு மென்பொருளினை 01.10.2017 முதல் பிறப்பு இறப்பு பதிவு குறித்து தொடர்புடைய அனைத்து துறைகளிலும் அமல்படுத்திட அரசு ஆணை எண். 351 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (AB2) நாள். 09.10.2017 ஆணையிடப்பட்டது 1.10.2017 முதல் மேற்குறிப்பிட்ட மென்பொருள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஆணையில் அனைத்து பிரசவித்த தாய்மார்களுக்கு ஆர்.சி.ஹெச் அடையாள எண் (RCH ID) வழங்க வேண்டுமென்பது குழந்தையின் பிறப்பினை பதிவு செய்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பிரசவித்த தாய்மார்களுக்கும் பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கும் தாய்சேய் நல சேவைகள் கிடைத்ததை உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை  மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள , மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுக்கா மற்றும் தாலுக்கா அல்லாத மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு இறப்பு பதிவுகளை உடனடியாக பதிவு செய்திடவும் அம்மருத்துவமனையை விட்டு செல்லும் முன் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கிட பொது சுகாதாரத் துறையின் பல்நோக்கு மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களை பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்திடவும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர்களை பிறப்பு இறப்பு பதிவாளர்களாக மேற்குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் நியமித்திடவும் அரசு ஆணை எண். 353 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (AB2) நாள்.09.10.2017 ஆணையிடப்பட்டுள்ளது.