மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை
விவரங்கள்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-ன் கீழ் பொதுவிநியோகத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் நியாயவிலை அங்காடிகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எவ்வித குறைபாடுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நிறுவன விளக்கப்படம்
நோக்கங்கள்
இம்மாவட்டத்தில் உள்ள 1185 நியாயவிலை அங்காடிகளுக்கும் தேவையான பொது விநியோகத்திட்ட நியாயவிலை அங்காடிகளுக்கும் தேவையான பொதுவிநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள், சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளா் அவா்களால் நேரடியாக ஜி2ஜி இணையதளம் வழியாக அனைத்து அங்காடிகளுக்கும் விற்பனை முனைய இயந்திரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆணையாளா் அவா்களால் ஒதுக்கீடு செய்யப்படும் அளவுகளின்படி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக வட்ட கிட்டங்கியிலிருந்து முதன்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் நகா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 – 01.11.2016 முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் குடும்ப அட்டைகள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- முன்னுரிமைப் பெற்ற குடும்பங்கள்
- முன்னுரிமையற்ற குடும்பங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றையநாளில் 279444 முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளும் 270549 முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளும் புழக்கத்தில் உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தொலைபேசி எண் – 04364-290761
செயல்பாடுகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது பொது விநியோகத் திட்டடத்தின் மூலம் குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்திட 1185 நியாயவிலை அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு
வ.எண் | அங்காடிகள் விவரம் | அங்காடிகளின் எண்ணிக்கை |
---|---|---|
1 | முழு நேர அங்காடிகள் | |
2 | பகுதிநேர அங்காடிகள் | |
3 | மகளிர் சுய குழுவினர் நடத்தும் அங்காடிகள் | |
கூடுதல் |
இம்மாவட்டத்தில் 1183 விற்பனை முனைய கருவிகள் மூலம் நியாயவிலை அங்காடிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித குறைபாடுமின்றி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள 1185 அங்காடிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விற்பனை முனைய கருவிகள் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அங்காடிகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதை இணையத்தின் மூலம் கண்காணித்து உறுதி செய்யப்படுகிறது. இம்மாவட்டதில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளுக்கு தினமும் காலை 09.00 மணி முதல் நண்பகல் 01.00 வரையிலும் மதியம் 03.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் வேலை நேரமாகும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாம் வார வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகும். அதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை வேலை நாட்களாகும்.
வரிசை எண் | அலுவலர்களின் பெயர் |
---|---|
1 | வட்ட வழங்கல் அலுவலர், மயிலாடுதுறை |
2 | வட்ட வழங்கல் அலுவலர், குத்தாலம் |
3 | வட்ட வழங்கல் அலுவலர், சீர்காழி |
4 | வட்ட வழங்கல் அலுவலர், தரங்கம்பாடி |
மேலும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் கடத்தலை தடுக்க வட்டாட்சியர் நிலையில் 1 பறக்கும் படை தனி வட்டாட்சியரும் துணை வட்டாட்சியர் நிலையில் 1 பறக்கும் படை தனித் துணை வட்டாட்சியரும் 3 தனி வருவாய் ஆய்வாளர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய மின்னனு குடும்ப அட்டை பெற்றிட விண்ணப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்திடல்
புதிய மின்னனு குடும்ப அட்டை பெறுவதற்கும், தற்போதுள்ள குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், அங்காடி மாற்றம் மற்றும் மாவட்ட மாறுதல் போன்ற பணிகளை செய்து கொள்ள பொது மக்கள் வட்ட வழங்கல் அலுவலத்திற்கு செல்லாமலே தாங்கள் வசித்து வரும் இடத்திலிருந்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து மேற்படி பணிகளை செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு தனி இணைய தளம் உள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி வருமாறு. www[dot]tnpds[dot]gov[dot]in இந்த இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்திடவேண்டும். அவற்றின் மீது தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரால், ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம். புதிய மின்னனு குடும்ப அட்டைகள் சென்னையிலிருந்து அச்சிட்டு வரப்பெற்றவுடன், உரிய நியாயவிலை அங்காடிகள் மூலம் விண்ணப்பதாரா்களுக்கு அவை விநியோகிக்கப்படும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005- தொடா்புகள்-
மாவட்ட நிலையில் – பொது தகவல் அலுவலா் – மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா், மயிலாடுதுறை.
மேல்முறையீட்டு அலுவலா் – மாவட்ட வருவாய் அலுவலா், மயிலாடுதுறை.
வட்ட நிலையில் – பொது தகவல் அலுவலா் – தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா்கள்.
மேல்முறையீட்டு அலுவலா் – தொடா்புடைய சார் ஆட்சியா் – வருவாய் கோட்டாட்சியா்.