உயர்கல்வி வழிகாட்டல் கட்டுபாட்டு மைய சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை” துவக்கம்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி 10இ 11இ மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100மூ உயர்கல்வி சேர்க்கை பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் 4-வது தளத்தில் அறை எண் 409-ல் “உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை” அமைக்கப்பட்டு தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.