Close

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்) – PMAY (Gramin)

முக்கிய நோக்கம் :

2022-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் அனைத்து வீடற்ற –குடிசை அல்லது பாழடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டித்தருதல்.

நிதி ஆதாரம் :

ஒரு வீட்டிற்கான மெத்த மதீப்பீட்டுத்தொகை ரூ.170000/-ல் (திட்ட நிதி ரூ.120000/- (கூடுதல்) கான்க்ரீட் கூரைக்கான தொகை ரூ.50000/-)

திட்ட நிதி ஒதுக்கீடு

  • மத்திய அரசு – 60 விழுக்காடு – ரூ.72000/-
  • மாநில அரசு – 40 விழுக்காடு – ரூ.48000/-
  • ஆக கூடுதல் ரூ.120000/- தொகை முழுவதும் இணையதளத்தின் வழியாக (PFMS) பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது
  • கான்க்ரீட் கூரைக்கான தொகை ரூ.50000/- மாநில அரசால் முழுவதுமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அனைத்தும் தொடா்புடைய வட்டாரங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையில் சிமெண்ட், கம்பி, கதவு ஐன்னல் மற்றும் லோகோ டைல்ஸ் ஆகியவற்றிற்கான தொகை முழுவதும் வட்டாரங்களில் பிடித்தம் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்படுகிறது

பயனாளிகள் :

  • சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின்படி (SECC) தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு
  • இனவாரி ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் மீதமுள்ள 40 விழுக்காடு இதர வகுப்பினருக்கும் வழங்கப்படும்
  • மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள், பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்
  • இத்திட்டத்திக்கீழ் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டா் பரப்பில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட வேண்டும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் வீட்டின் கட்டுமானப்பணிக்காக 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியமும், தூய்மை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கழிப்பறைக்கான மதிப்பீட்டு தொகை ரூ.120000/-ம் வழங்கப்படும்.

PMAY