மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 17-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025District Collector’s Field Inspection – 17-12-2025 (PDF 209KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 263KB)
மேலும் பலமகளிர் திட்டம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வுப் பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- மகளிர் திட்டம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 18KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 30KB)
மேலும் பலகலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 162KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிநேரில் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிநேரில் பார்வையிட்டார். (PDF 277KB)
மேலும் பலஅறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.5 (PDF 101KB)
மேலும் பலவாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். .(PDF 210KB)
மேலும் பலநிறைந்தது மனம் – 11.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ மற்றும் தொழிலாளர் நலவாரியம் சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் திட்டத்தின் மூலம்;ரூ.3 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கலந்துரையாடினார்கள் (PDF 541KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக நெல் சேமிப்பு தளங்கள் கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்;.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், மயிலாடுதுறை வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் 21000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் கட்டுமானப் பணிகளுக்கும், தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் 9000 மெ.டன்; கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்; (PDF 41KB)
மேலும் பலகுத்தாலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025குத்தாலம் பேரூராட்சியில், ரூ.2.96 கோடி மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். (PDF 46KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 143KB)
மேலும் பலபடை வீரர் கொடிநாள் – 07.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025படை வீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு .(PDF 96KB)
மேலும் பலமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 102KB)
மேலும் பலசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 34KB)
மேலும் பலமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 40KB)
மேலும் பலஎய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி -01-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மயிலாடுதுறை மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 30KB)
மேலும் பலகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் “டிட்வா” புயலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 355KB)
மேலும் பலசிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 401KB)
மேலும் பல
