Close

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
1) விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2) இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3) ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4) கல்வி உதவித்தொகை 5) திருமண உதவித்தொகை 6) மகப்பேறு உதவித்தொகை 7) மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் 8) முதியோர் ஓய்வூதியம்.
மேற்படி, நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3)அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில்இ நிலமற்ற விவசாய கூலி;இ உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல்இ நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி கீழ்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். றறற.னnஉறடி.வn.பழஎ.in மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்;.

22/05/2026 31/05/2026 பார்க்க (354 KB)