முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2026-27 சார்ந்தோர் சான்று வழங்கப்படவுள்ளது
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2026-27 சார்ந்தோர் சான்று வழங்கப்படவுள்ளது | மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின்; சிறார்களுக்கு 2026-27 ஆம் ஆண்டில், முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்த படிவத்துடன், ஓய்வூதிய ஆணை நகல், படைவிலகல் சான்றில் மாணவர் ஃ மாணவி பெயர் இல்லாத நிலையில் அதற்கான நகல், மாணவர் மாணவி ஆதார் அட்டை நகல் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்று கோரும் மாணாக்கர்களுடன் இவ்வலுவலகத்திற்கு நேரில் வருமாறும், அவ்வாறு நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆவணங்களை என்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது (04365-299765) என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
11/05/2026 | 31/05/2026 | பார்க்க (19 KB) |