அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் | இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. |
05/12/2025 | 31/12/2025 | பார்க்க (208 KB) |
| பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை | அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவ மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை |
05/12/2025 | 31/12/2025 | பார்க்க (284 KB) |
| சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2025 | 2025 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
04/12/2025 | 18/12/2025 | பார்க்க (328 KB) |
| நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகைகள், காப்பீடுத் தொகைகள் மற்றும் பங்குத் தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாமானது அந்தந்த வங்கிக் கிளைகளில் நடைபெற உள்ளது. | 04/12/2025 | 31/12/2025 | பார்க்க (208 KB) | |
| தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக இலவச மாதிரித் தேர்வு | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக இலவச மாதிரித் தேர்வு |
03/12/2025 | 31/12/2025 | பார்க்க (203 KB) |
| மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். | விவசாயிகள் பயிர் மேலாண்மை முறையை கடைபிடித்து மழைநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை காத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
27/10/2025 | 31/12/2025 | பார்க்க (29 KB) |
| “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம் | இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் |
30/07/2025 | 31/12/2025 | பார்க்க (201 KB) |