அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம் | இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் |
30/07/2025 | 31/12/2025 | பார்க்க (201 KB) |
| மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். | விவசாயிகள் பயிர் மேலாண்மை முறையை கடைபிடித்து மழைநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை காத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
27/10/2025 | 31/12/2025 | பார்க்க (29 KB) |
| தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக இலவச மாதிரித் தேர்வு | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக இலவச மாதிரித் தேர்வு |
03/12/2025 | 31/12/2025 | பார்க்க (203 KB) |
| நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகைகள், காப்பீடுத் தொகைகள் மற்றும் பங்குத் தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாமானது அந்தந்த வங்கிக் கிளைகளில் நடைபெற உள்ளது. | 04/12/2025 | 31/12/2025 | பார்க்க (208 KB) | |
| பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை | அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவ மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை |
05/12/2025 | 31/12/2025 | பார்க்க (284 KB) |
| தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் | இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. |
05/12/2025 | 31/12/2025 | பார்க்க (208 KB) |
| விவசாயிகளுக்கு திரு. நாராயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது | அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு திரு. நாராயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பங்கு பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் அழைப்பு விடுவித்துள்ளார். |
18/12/2025 | 31/12/2025 | பார்க்க (28 KB) |
| பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
19/12/2025 | 31/12/2025 | பார்க்க (198 KB) |
| பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு “அவ்வையார் விருது” வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு “அவ்வையார் விருது” வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/12/2025 | 31/12/2025 | பார்க்க (258 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31-12-2025 | மயிலாடுதுறை மாவட்ட டிசம்பர் – 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.12.2025 அன்று காலை 10.00 மு.ப. மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
23/12/2025 | 31/12/2025 | பார்க்க (16 KB) |
| பணியாளர் தேர்வாணையத்தின் பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 29.12.2025 அன்று நடைபெறவுள்ளது | பணியாளர் தேர்வாணையத்தின் பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 29.12.2025 அன்று நடைபெறவுள்ளது |
24/12/2025 | 29/12/2025 | பார்க்க (209 KB) |
| “உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் “உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டத்தின் கீழ் 26.12.2025 அன்று 10 வருவாய் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் |
23/12/2025 | 26/12/2025 | பார்க்க (261 KB) |
| மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 20.12.2025 | 18/12/2025 | 21/12/2025 | பார்க்க (235 KB) job fair 20-12-2025 (235 KB) | |
| கலைஞர் கைவினைத் திட்டத்தின் (முமுவு) கீழ் 35 வயதுக்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உற்பத்;தி மற்றும் சேவை தொழில் தொடர்பான தொழில்களுக்கு கடன் பெறலாம். | கடன் தொகையில் 25மூ அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில்; 25 வகையான கைவினைக் ;கலைகள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான கடன் வசதி முகாம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்; 19.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. |
15/12/2025 | 19/12/2025 | பார்க்க (197 KB) |
| தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. | தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கு கடன்), கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. |
17/12/2025 | 19/12/2025 | பார்க்க (203 KB) |
| சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2025 | 2025 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
04/12/2025 | 18/12/2025 | பார்க்க (328 KB) |
| முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு | தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4 ஆயிரம் வேளாண் பட்டதாரிகளும், 600 -க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் 1000 முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
30/10/2025 | 30/11/2025 | பார்க்க (199 KB) |
| கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் | உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் |
21/11/2025 | 27/11/2025 | பார்க்க (223 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27-11-2025 | மயிலாடுதுறை மாவட்ட நவம்பர் – 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.11.2025 அன்று காலை 10.00 மு.ப. மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
20/11/2025 | 27/11/2025 | பார்க்க (201 KB) |
| குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்)கட்டிடம் கட்டும்பணிக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) – முதற்கட்ட அறிவிக்கை | குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்)கட்டிடம் கட்டும்பணிக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) – முதற்கட்ட அறிவிக்கை |
10/09/2025 | 31/10/2025 | பார்க்க (850 KB) |