அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு வழக்கறிஞர் பணி நியமன அறிவிப்பு | 01/06/2026 | 30/06/2026 | பார்க்க (1,020 KB) | |
| வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை விவசாய தொழில்முனைவோர் கடன்பெற விண்ணப்பிக்கலாம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை விவசாய தொழில்முனைவோர் கடன்பெற விவசாய குழுக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடப்பு 2026-27-ஆம் ஆண்டிற்கு ரூ.20 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் |
09/06/2026 | 30/06/2026 | பார்க்க (25 KB) |
| கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். | கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். |
09/06/2026 | 30/06/2026 | பார்க்க (19 KB) |
| பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி | பருத்தி ஏல விபரங்களுக்கு செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் – 9585721284, மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் – 8012224723 குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் – 8220869684, சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் – 9994392479 |
15/06/2026 | 30/06/2026 | பார்க்க (96 KB) |
| தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி | 16/06/2026 | 30/06/2026 | பார்க்க (378 KB) | |
| தாட்கோ மூலமாக இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது | (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது |
20/06/2026 | 30/06/2026 | பார்க்க (194 KB) |
| போலியோ சொட்டு மருந்து முகாம்; 28.06.2026 | மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்; 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல். |
25/06/2026 | 28/06/2026 | பார்க்க (99 KB) |
| முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.25-06-2026 | முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம். 25-06-2026 |
17/06/2026 | 25/06/2026 | பார்க்க (252 KB) |
| 25.06.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.06.2026 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
20/06/2026 | 25/06/2026 | பார்க்க (17 KB) |
| குடும்ப அட்டைதாரர்களும் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் | மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது வரை கைவிரல்ரேகையை பதிவு செய்யாதவர்கள் 20.06.2026-க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
15/06/2026 | 20/06/2026 | பார்க்க (176 KB) |
| மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நீதி விடுதிகள் | ( பிற்படுத்தப்பட்டோர் & மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்) |
05/06/2026 | 18/06/2026 | பார்க்க (21 KB) |
| மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படவுள்ள செய்தி | ஆதிதிராவிடர் மக்களின் நலனைப் பேணுவதற்காக மாவட்டங்களில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்பட வேண்டும். தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு பணிக்காலம் மூன்றாண்டுகள் நிறைவுற்றதால், இக்குழுவினை மறு சீரமைத்து செயல்படுத்திட 1.“ஏ” நிலை ஆதிதிராவிட அலுவலர் ஒருவர், 2.“பி” நிலை ஆதிதிராவிட அலுவலர் ஒருவர், |
05/06/2026 | 18/06/2026 | பார்க்க (89 KB) |
| கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. | தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதி முழுவதிலும் (திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. |
15/04/2026 | 14/06/2026 | பார்க்க (188 KB) |
| சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் | தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது |
05/06/2026 | 05/06/2026 | பார்க்க (362 KB) |
| தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2026-ம் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு | 2026-2027-ஆம் கல்வியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட எனும் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். |
27/05/2026 | 03/06/2026 | பார்க்க (208 KB) |
| முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2026-27 சார்ந்தோர் சான்று வழங்கப்படவுள்ளது | மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின்; சிறார்களுக்கு 2026-27 ஆம் ஆண்டில், முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்த படிவத்துடன், ஓய்வூதிய ஆணை நகல், படைவிலகல் சான்றில் மாணவர் ஃ மாணவி பெயர் இல்லாத நிலையில் அதற்கான நகல், மாணவர் மாணவி ஆதார் அட்டை நகல் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்று கோரும் மாணாக்கர்களுடன் இவ்வலுவலகத்திற்கு நேரில் வருமாறும், அவ்வாறு நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆவணங்களை என்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது (04365-299765) என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
11/05/2026 | 31/05/2026 | பார்க்க (19 KB) |
| கால்நடைத்துறை – செய்தி | கோடைகாலத்தில் அதிகரித்துள்ள வெயில் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். |
12/05/2026 | 31/05/2026 | பார்க்க (30 KB) |
| உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி | விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும்;, அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. |
19/05/2026 | 31/05/2026 | பார்க்க (72 KB) |
| மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கான தகுதி | மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை வெளிசந்தை முறையில் முகமை மூலம் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.50,000-ல் நிரப்பிட உள்ளது. |
19/05/2026 | 31/05/2026 | பார்க்க (22 KB) |
| இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் | மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கால் மற்றும் இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதல் விவரங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
19/05/2026 | 31/05/2026 | பார்க்க (18 KB) |