அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி | வழிகாட்டுதல் நிகழ்ச்சி 19.08.2026 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், மயிலாடுதுறை, கால் டாக்ஸி பெட்ரோல் பங்கில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில், பாலாஜி நகர் 2-வது தெருவில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. |
17/08/2026 | 19/08/2026 | பார்க்க (66 KB) |
| திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் | திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.08.2026 அன்று காலை 10.00 அளவில் நடைபெற உள்ளது. |
17/08/2026 | 19/08/2026 | பார்க்க (27 KB) |
| அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்புதல். | மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாதானம் மற்றும் கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பாடப்பிரிவில் தலா 1 காலிபணியிடம் வீதம் மொத்தம்-2 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதற்கு 06.08.2026 முதல் 13.08.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
06/08/2026 | 13/08/2026 | பார்க்க (17 KB) |
| தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று | தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய்; தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 10.08.2026 வரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். |
01/07/2026 | 10/08/2026 | பார்க்க (188 KB) |
| உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் | விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம்.மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1)முஸ்லீம் இனத்தை சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3)பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் ஃ ஆசிரியைகள் மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷ_ர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர். |
23/06/2026 | 31/07/2026 | பார்க்க (188 KB) |
| ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. |
24/06/2026 | 31/07/2026 | பார்க்க (275 KB) |
| திரு. நாராயணசாமி நாயுடு விருது அறிவிப்பு | மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு, திரு. நாராயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இதில் பங்கு பெற மாவட்ட ஆட்சித்த்லைவர் அவர்கள் அழைப்பு விடுவித்துள்ளார். |
24/06/2026 | 31/07/2026 | பார்க்க (29 KB) |
| கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கான செய்தி | கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1.விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 2.இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, 3.ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, 4.கல்வி உதவித்தொகை, 5.திருமண உதவித்தொகை, 6.மகப்பேறு உதவித்தொகை, 7;.மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், 8.முதியோர் ஓய்வூதியம் |
23/06/2026 | 31/07/2026 | பார்க்க (188 KB) |
| வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை புதுப்பித்து வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை | வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை புதுப்பித்து வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு. |
03/07/2026 | 31/07/2026 | பார்க்க (28 KB) |
| உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம் | உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது |
03/07/2026 | 31/07/2026 | பார்க்க (197 KB) |
| முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கு மருத்துவ படிப்பிற்கான சார்ந்தோர் சான்று வழங்கப்படவுள்ளது | 06/07/2026 | 31/07/2026 | பார்க்க (191 KB) | |
| திறன் மேம்பாடு பயிற்சியில் கலந்துகொள்ள சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்படவுள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் கலந்துகொள்ள சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் |
08/07/2026 | 31/07/2026 | பார்க்க (264 KB) |
| மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது | 08/07/2026 | 31/07/2026 | பார்க்க (46 KB) | |
| நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது | பட்டியல் மற்றும் பழங்குடியினர் இன மக்களை தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு |
16/07/2026 | 31/07/2026 | பார்க்க (185 KB) |
| ஜீவன் ரக் பதக் விருது – 2026 | மத்திய உள்துறை அமைச்சகத்தால் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சாரம் தாக்கி இறத்தல், நிலச்சரிவுகள், விலங்குத் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படும் மனிதநேயமிக்க நற்செயல்களுக்காக, ஜீவன் ரக் பதக் விருது 2026 வழங்கப்பட உள்ளதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.07.2026க்குள் விண்ணப்பிக்கலாம். |
25/07/2026 | 31/07/2026 | பார்க்க (20 KB) |
| 30.07.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மயிலாடுதுறை மாவட்டம் ஜீலை – 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.07.2026 அன்று காலை 10.00 மு.ப மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
27/07/2026 | 31/07/2026 | பார்க்க (340 KB) |
| 2027-ஆம் ஆண்டிற்கு பத்ம விருதுகள் வழங்குதல் | மயிலாடுதுறை மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கு பத்ம விருதுகள் வழங்குதல் – சாதனை புரிந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். |
25/07/2026 | 29/07/2026 | பார்க்க (25 KB) |
| , “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” | மயிலாடுதுறை வட்ட அளவில் எதிர்வரும் 15.07.2026 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 16.07.2026 வியாழக்கிழமை காலை 09.00 மணி வரை |
14/07/2026 | 16/07/2026 | பார்க்க (256 KB) |
| “ தமிழ்நாடு நாள் விழா“ | தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஆண்டுதோறும் சூலை 18-இல் “ தமிழ்நாடு நாள் விழா“ கொண்டாடுதலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 15.07.2026 புதன்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் தியாகி .ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. |
13/07/2026 | 15/07/2026 | பார்க்க (157 KB) |
| முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2026 | 01/07/2026 | 13/07/2026 | பார்க்க (107 KB) |