அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு | தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4 ஆயிரம் வேளாண் பட்டதாரிகளும், 600 -க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் 1000 முதலமைச்சரின் உழவர் சேவை மையங்கள் அமைக்கப்படும் என 2025-26- ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
30/10/2025 | 30/11/2025 | பார்க்க (199 KB) |
| மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். | விவசாயிகள் பயிர் மேலாண்மை முறையை கடைபிடித்து மழைநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை காத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
27/10/2025 | 31/12/2025 | பார்க்க (29 KB) |
| “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம் | இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் |
30/07/2025 | 31/12/2025 | பார்க்க (201 KB) |