Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் நடைபெறவுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குத்தாலம் மற்றும் கொள்ளிடம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை

19/01/2026 06/02/2026 பார்க்க (18 KB)
முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிப்ரவரி 2026 மாதத்தில் 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய தேதிகளில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் இந்த பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்களை அவர்களின் வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

30/01/2026 03/02/2026 பார்க்க (23 KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதிய மற்றும் புதுப்பித்தல் மாணாக்கர்

06/01/2026 31/01/2026 பார்க்க (209 KB)
ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளைப் மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீனவர்களுக்கு ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ 37.1 இலட்சம் மதிப்பீட்டில் 158 ஆமை விலக்கு சாதனங்கள் வழங்கப்பட்டன.

28/01/2026 31/01/2026 பார்க்க (208 KB)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கால நீட்டிப்பு குறித்த அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கால நீட்டிப்பு குறித்த அறிவிப்பு

20/01/2026 30/01/2026 பார்க்க (202 KB)
8-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

29/12/2025 28/01/2026 பார்க்க (236 KB)
மயிலாடுதுறை மாவட்டத்தில் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.

20/01/2026 26/01/2026 பார்க்க (88 KB)
தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக குறள்வார விழா

மேலும் விவரங்களுக்கு 8925437555, 8754828470 ஆகிய அலைபேசி எண்

06/01/2026 21/01/2026 பார்க்க (212 KB)
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகளில் ஒன்றிய அளவிலான போட்டிகள் அந்த அந்த ஊராட்சி ஒன்றியங்களில் 22.01.2026 முதல் 25.01.2026 வரை நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 30.01.2026 முதல் 01.02.2026 வரை நடத்தப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகள் 06.01.2026 முதல் 08.01.2026 வரை நடைபெறவுள்ளது.

09/01/2026 21/01/2026 பார்க்க (312 KB)
மஞ்சப்பை விருது 2025 – 2026 15/12/2025 15/01/2026 பார்க்க (275 KB) Application for Manjappai Award (4 MB)
கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் – செய்தி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை  தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.

02/01/2026 14/01/2026 பார்க்க (403 KB)
“அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம்

இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்

30/07/2025 31/12/2025 பார்க்க (201 KB)
மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விவசாயிகள் பயிர் மேலாண்மை முறையை கடைபிடித்து மழைநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை காத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

27/10/2025 31/12/2025 பார்க்க (29 KB)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக இலவச மாதிரித் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக இலவச மாதிரித் தேர்வு

03/12/2025 31/12/2025 பார்க்க (203 KB)
நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகைகள், காப்பீடுத் தொகைகள் மற்றும் பங்குத் தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாமானது அந்தந்த வங்கிக் கிளைகளில் நடைபெற உள்ளது. 04/12/2025 31/12/2025 பார்க்க (208 KB)
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட  மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவ மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை

05/12/2025 31/12/2025 பார்க்க (284 KB)
தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய  வங்கிக் கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

05/12/2025 31/12/2025 பார்க்க (208 KB)
விவசாயிகளுக்கு திரு. நாராயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது

அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு திரு. நாராயணசாமி நாயுடு விருது அறிவிக்கப்பட்டுள்ளது எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பங்கு பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் அழைப்பு விடுவித்துள்ளார்.

18/12/2025 31/12/2025 பார்க்க (28 KB)
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

19/12/2025 31/12/2025 பார்க்க (198 KB)
பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு “அவ்வையார் விருது” வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு “அவ்வையார் விருது” வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01/12/2025 31/12/2025 பார்க்க (258 KB)